கற்பி !
ஒன்று சேர்!
புரட்சி செய்!
விலை போகும் சமுதாய தலைவர்கள்
விடுகின்ற கதைகளுக்கு அப்பால்
கானல் நீர்களை வற்றாத சுனைகள் என்று காட்டி
நம்மை அழிக்கும் துரோகங்களுக்கு அப்பால்
அண்ணல் அம்பேத்கர் கூறிய பாதையில்
எழுந்திடு
நிமிர்ந்திடு
போராடு
உண்மை நிலையை உணர்ந்திடு.
எழுவாய் தலித்தே
நெருப்பாய்
ஒடுக்கிய கூட்டத்தின்
கைகளை உடைப்பாய்
அடக்கிய கும்பலின்
ஆணவம் அழிப்பாய்
துரோகக் கும்பலின்
சுவடினை துடைப்பாய்
பெண்ணடிமை ஒழிப்பாய்
பொய் அம்பேத்கரியம் பேசும்
விலை போன தலைமைகளை
வேரறுப்பாய்
Friday, October 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment